கொடூர வில்லனாக நடிக்கும் வடிவேலு

108
Advertisement

ராஜ்கிரன் நடித்த என் ராஜாவின் மனசிலே படம் மூலம் பிரபலமாகி, 35 வருடங்களுக்கு மேலாக நகைச்சுவையில்  கொடிகட்டி பறக்கும் வடிவேலுவிற்குத் தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள், சமூகவலைதளங்களில் வடிவேலுவின் மீம்ஸ் எப்போதும் ட்ரெண்டிங்கில் தான் இருக்கும், அதற்கு காரணம் இவர் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் , ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார், ஆனால் வில்லனாக இதுவரை நடிக்கவில்லை, இந்நிலையில் வடிவேலுவைப் பயங்கர கொலைகள் செய்யும் கொடூர வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஜி.வி.பிரகாஷின் அடுத்து படத்தில்தான் வடிவேலுவிடம் வில்லனாக நடிக்கப் பேசி வருகிறார்கள். எனவே கதை பிடித்துள்ளதால் வில்லனாக நடிக்கச் சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்புகிறார்கள். வடிவேலுவின் வில்லத்தனம் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளனர்.