கை, கால் துண்டித்து குழந்தை கொலை

303
Advertisement

தஞ்சை அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் இருந்து போலீசார் மீட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் கை, கால்களை நாய்கள் கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுவின் உடலை கைப்பற்றினர். பச்சிளம் குழந்தையின் உடல் இங்கு எப்படி வந்தது?, யாருடைய குழந்தை என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். ஆண் குழந்தையின் உடல் ரயில்வே தண்டவாளம் அருகே மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.