கேரளாவில் நடந்த பயங்கர விபத்து பரபரப்பை சிசிடிவி ஏற்படுத்திய காட்சி

276

கேரளாவில் அதிவேகமாக வந்த கார், மற்றொரு கார் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கேரளா கோழிக்கோடு – பாலக்காடு நெடுஞ்சாலையில், முறையூர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார், பெட்ரோல் நிரப்புவதற்காக வலது புறமாக திரும்பியது. அப்போது அந்த காரின் பின்னால் அதிவேகமாக வந்த கார், பெட்ரோல் நிரப்புவதற்காக திரும்பிய கார் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.