கெளதம் அதானியின் விலையுயர்ந்த விஷயங்கள் 

27
Advertisement

உலகின் மூன்றாவது பணக்காரரான கெளதம் அதானியின் விலையுயர்ந்த விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம். இவரின் சொத்து மதிப்பு $147 பில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது, தொழில் ரீதியாக உலகின் பல இடங்களுக்கு இவர் செல்வதால் சொந்தமாக மூன்று ஜெட் விமானங்களை வைத்துள்ளார், 

டெல்லியில் 3.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இவரது வீட்டின் இன்றைய மதிப்பு சுமார் 400 கோடி என்று சொல்லப்படுகிறது, இவர் வைத்திருக்கும் பல சூப்பர் கார்களில் பி எம் டபல்யூ 7 ரக கார்கள் இவருக்கும் மிகவும் பிடித்தவையாகும். 

மேலும் அதிவிரைவாகச் செல்லக்கூடிய மூன்று ஹெலிகாப்டர்களை சொந்தமாகக் கொண்டுள்ளார், அதில் aw 139 என்ற எலிகாப்டரின் விலை ரூபாய் 12 கோடியாகும். 

Advertisement

அதுமட்டுமில்லாமல் அதானி வைத்திருக்கும் தனியார் கப்பல்தான், இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கப்பலாகும். 

மேலும் இவர் நாட்டிற்காகப் பல நன்கொடைகளைக் கொடுத்துள்ளார், தனது 60வது பிறந்தநாளில் சமூகப் பாதுகாப்பு சேவைக்காக ரூ 60, 000 கோடி நன்கொடையும் மேலும் கொரோனா பேரிடரில் ரூ 100 கோடியை PM ஷெர்க்கு வழங்கியுள்ளார்.