காருக்குள்  தலையைவிட்ட நெருப்புக்கோழி-குழந்தை செய்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி  

29
Advertisement

அமெரிக்காவின்  டென்னசி சஃபாரி பூங்காவை சுற்றிப்பார்க்க  சென்றபோது 3 வயது குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அங்குள்ள நெருப்புக்கோழிகளுக்கு காரில் இருந்தபடி ஒரு குடும்பத்தினர்  உணவு பொருள் ஒன்றை கொடுத்துக்கொண்டு இருந்தனர்.

அதில், “எம்மா” என்கிற 3 வயது சிறுமியும் ஆர்வமாக நெருப்புக்கோழிகளுக்கு  உணவு வழங்குகிறார்.சில வினாடிகளில், ஒரு நெருப்புக்கோழி தலையை காரின் உள்ளே விட்டு அவர்கள் கையில் உள்ள உணவு பொருளை மும்மரமாக சாப்பிட தொடங்கியது.

அந்நேரம் ஆர்வத்தில் இருந்த எம்மா , நெருப்புக்கோழியின் தலையை கட்டிபிடித்துக்கொண்டார்.ஒரு  நிமிடம் அந்த கோழி தடுமாறி , குழந்தையிடமிருந்து விடுபட்டது.இதை பார்த்த எம்மாவின் அம்மா திகைத்து போனார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement