கடைசி பந்து வரை ‘திக் திக்’நொடிகள்.. த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

296
Advertisement

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.


ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணி டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 9 ரன்களிலும், வெங்கடேஷ் 18 ரன்னிலும், திரிபாதி 45 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நிதிஷ் ரானா, ருசேல், தினேஷ் கார்த்தியின் அதிரடியால் அந்த அணி 171 ரன்கள் குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கெய்க்வாட் 40 ரன்னும், டு பிளேசிஸ் 43 ரன்களும், மொயின் அலி 32 ரன்கள் எடுத்தனர். வெற்றி எளிது என்ற நினைத்த நிலையில், அடுத்தடுத்த விக்கெட் விழுந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், தீபக் சஹார் ஒரு ரன் எடுக்க சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியல் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.