ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கட்டாயமா?

62
Advertisement

மூன்று வேளையும் கட்டாயம் உணவு சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி பல வருடங்களாக இருந்து வருகிறது, சரியான நேரத்தில் உணவைக் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதை விட உடலைக் கட்டுக்கோப்பாக  வைத்துக் கொள்வதற்கு தினமும் சிறிது நேரம் உடற்பறிச்சி  அவசியம் என்ற கருத்து நிலவி வருகிறது.

இன்றைய அவசர உலகில் நமது வாழ்வு ஒரு  இயந்திரம் போல் மாறிவிட்டது, ஆகவே கிடைக்கின்ற நேரத்தில் உணவுகளை அவசர அவசரமாகச் சாப்பிடுகின்றோம். இதனால் பல விதமான பிரச்சனைகள் நமது உடலுக்கு வருகிறது

ஒவ்வொரு நபரும் தங்களது ஆரோக்கியத்திற்காக வேறுப்பட்ட உணவு முறைகளைக் கடைப்பிடிக்கின்றோம், எனவே சரியான பழக்க வழக்கம் எது என்பது தெரியாமல் போய் விடுகிறது .

Advertisement

ஆனால் 3  வேளையும் உணவு உண்பதே உடல் நலனுக்கு சரியானது என்று சொல்லப்படுகிறது

தூங்கும் நேரம், நள்ளிரவு அதிகாலை போன்ற நேரங்களில்  உடலின் மெலோடின் அளவு அதிகமா இருக்கும் அந்த சமையங்களில் உணவைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு வேளை உணவிற்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையே கண்டிப்பாக 12 மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது எனவே இதனை எல்லாம் அடிப்படையாக வைத்தே மூன்று அரை அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு சாப்பிட வேண்டும் என்று நடை முறைப்படுத்தப்பட்டது .