என்.சி.சி.யை மேம்படுத்தும் குழுவில் தல தோனி!

236
Advertisement

என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் ஆய்வு குழுவில், எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.

இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான என்.சி.சி-யை, நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, முன்னாள் எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையில், உயர் மட்டக்குழுவை மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது.

Advertisement

இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது.

தோனி, இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் ஒருமாதம் தங்கியிருந்து பயிற்சி பெற்றதால், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.