ஊர் முழுக்க அணைந்த விளக்கு! பள்ளியில் நடந்த இருட்டு சம்பவம் – புரட்டி எடுத்த மக்கள்

84
Advertisement

காதலியை ரகசியமாக சந்தித்து பேசுவதற்காக, ஒட்டுமொத்த கிராமத்தையும் இருளில் மூழ்கடித்த காதல் மன்னனை, கிராம மக்கள் திட்டம்போட்டு பிடித்த சம்பவம் பீஹாரில் அரங்கேறியுள்ளது.

பீஹார் மாநிலம் புர்னியாம் மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது. மாலையில் இருள் சூழும் நேரத்தில், இரண்டு முதல் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர் கதையாக இருந்த நிலையில், பக்கத்து கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாதால், அந்த கிராம மக்கள் சந்தேகமடைந்தனர்.

காரணத்தை ஆராய தீவிரமாக களமிறங்கிய, கிராம மக்களுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் மீது சந்தேகம் எழுந்தது. அவரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்றபோது, அந்த எலக்ட்ரீஷியன், மின்சாரத்தை துண்டித்துவிட்டு, கிராமத்து அரசு பள்ளியில் காதலியை ரகசியமாக சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதனையடுத்து காதல் மன்னன் எலக்ட்ரீஷியனை சுற்றிவளைத்த கிராம மக்கள், மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பின்னர் கிராம பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில், அந்த காதலியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.