உப்பால் வரும் பல விதமான நோய்கள் 

121
Advertisement

உப்பு இல்லாப் பண்டம் குப்பையில் என்ற பழமொழிக்கு ஏற்ப உணவில் உப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் நம்மால் சாப்பிடமுடியாது, அதுபோல உடலின் பல விதமான செயல்பாட்டிற்கு உப்பு அவசிய, ஆனால் அதிக அளவு உப்பை எடுத்துக் கொள்வதால், உடலில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளைக் கட்டாயம் தெரிந்திருப்பது அவசியம். 

அதிக அளவு உப்பு எடுத்துக்கொண்டால் உடலில் நீர் கோர்க்க வழிவகுக்கிறது, இதனால் சிலருக்கு உடல் வீங்கியது போல உணர்வு ஏற்படுகிறது, உப்பில் சோடியம் அதிகமாக இருக்கும், அதனால் குறுகிய காலத்திற்கு மட்டும் உப்பை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்ட பின்னர், குறைத்தாலும் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

அதிக உப்பு எடுத்துக் கொண்டால் உடலில் சேரும் அதிக அளவு சோடியம் சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டைப் பாதிக்கிறது, இதனால் இரத்த சுத்திகரிப்பு சீராக நடைப் பெறுவதில் தடை ஏற்படுகிறது.  மேலும்  சிறுநீரக செயல் இழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.   

Advertisement

 உப்பு உடலில் ஏற்படும் அதிக அளவு திசுக்கள்  மற்றும் செல்களின் திரவத்தைச் சேர்த்துவிடும், இது உடலிலிருந்து கால்சியத்தை வெளியே தள்ளும், இதனால் எலும்பு தேய்மானம் அடைந்து, எலும்பில் புரை பிரச்னை ஏற்படுகிறது. 

அதிகப் படியான உப்பு ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தும் மற்றும் இளம்பருவத்தினர் பருவமடைதலைத் தாமதப்படுத்துகிறது இது நடத்தை பிரச்னை மன அழுத்தத்தை உண்டாக்குகிறது, எனவே உடலில் உப்பு சேர்வதைத் தடுக்க  போதுமான அளவிற்குத் தண்ணீரை அருந்து உடலை நீரோட்டத்துடன் வைத்திருப்பது நல்லது மேலும் அளவான உப்பை உணவில் சேர்த்து கொள்வது நல்லது 

இவை அனைத்துமே அதிக உப்பை நீண்ட காலமாக  உட்கொண்டால் மட்டுமே ஏற்படுகிறது.