இந்தி மொழியை எதிர்த்து ட்வீட் செய்த ரஹ்மான் சிம்பு 

271
Advertisement

ட்விட்டர் பக்கத்துல ட்ரெண்ட் ஆகி வருது தமிழால் இனைவோம் #Tag அது மட்டும் இல்லாம சிம்பு மற்றும் அனிருத் போட்ட ட்வீட் , தற்போது வைரலாகி பேசப்பட்டுவருது டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில்.

இந்தியாவுல இந்தி மொழியை ஆங்கில மொழிக்கு பதிலாக மாத்தனும், அப்போதுதான் வெவ்வேறு மொழி பேசும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், பேசுவதற்கு எளிதாக இருக்கும் அப்படினு மத்திய மந்திரி அமித்ஷா கூறியிருந்தாரு, அதிகாரப் பூர்வமா இந்தி மொழிய, நாட்டினுடைய  ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில ஒரு இந்திய மொழியாக மாற்றும் நேரம் வந்துவிட்டது அப்படினு அதிர்ச்சி தரும் விஷயத்த சொல்லிருந்தாரு..

இந்த கருத்தை எதிர்கும் வகையில பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், அவங்களுடைய எதிர்ப்ப சமூகவலைத்தளங்கள்ல ஷேர் பண்ணிட்டு வராங்க. அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’என்ற படத்தைப் பதிவிட்டிருந்தார்

அந்த படத்துல இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றிருந்தது மேலும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிம்பு இருவருமே தமிழால் இனைவோம் மற்றும் #TamilConnects, அப்படினு ட்வீட்  பண்ணி இருக்காங்க, எனவே சமூகவலைத்தளங்கள்ல இந்த ட்வீட் வைரல் ஆகியிருக்கு .