‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

233
Advertisement

ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை வடிவமைத்துள்ளது.

தரையிலிருந்து ஆளில்லா விமான இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒடிசாவின் சந்திப்பூரில் நேற்று பரிசோதிக்கப்பட்டது.

Advertisement

அப்போது ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

ஆகாஷ் பிரைம் ஏவுகணையை மேம்படுத்திய பின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க டி.ஆர்.டி.ஓ. திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.