அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

26

சென்னைக்கு வரும்போதெல்லாம் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மொக கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

கூட்டணி கட்சிகள் குறித்து தேர்தல் வரும் போது தெரிவிப்போம் என்று கூறிய பழனிசாமி, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெற ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என்றார். மேலும், சென்னைக்கு வரும்போதெல்லாம் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement