Quantcast
 • பிரதமர் மோடியும் நானும் ஒன்றாக பணிபுரிவது நம் அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு : பிரணாப் முகர்ஜி
 • கால் டாக்சிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தனி மசோதா : நிதின் கட்காரி
 • பஞ்சாப் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியதால் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தேன் : சித்து விளக்கம்
 • தமிழகம் முழுவதும் 44 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் : டி.ஜி.பி. அதிரடி உத்தரவு
 • சட்ட விதிகளை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெறுவதுதான் வழக்கறிஞர்களின் பிரச்சனைக்குத் தீர்வாகும் : வைகோ
 • திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை
 • அரசு ஊழியர் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன : மத்திய அரசு
 • ஜப்பானில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மர்மநபர் கத்தி குத்து தாக்குதல் : 19 பேர் பலி
 • டெல்லியில் இஸ்ரேல் பெண் பாலியல் பலாத்காரம் : 2 பேர் கைது
327921-7019-10

முகத்தில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ்

சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு அழகுப் பராமரிப்பு பொருள் என்றால், அது சந்தனம் தான். ஏனெனில் இந்த சந்தனத்தில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக முகப்பரு பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், சந்தனத்தைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் சந்தன பொடி மட்டுமின்றி, சந்தன எண்ணெயும் பல சரும பிரச்சனைகளை போக்கக்கூடியது. அதிலும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் உள்ள கருமைகள், கரும்புள்ளிகள் போன்றவை.
லாவெண்டர் எண்ணெய்
முகமானது பொலிவிழந்து, கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, சந்தனப் பொடியில் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவ வேண்டும். மேலும் இந்த முறையால் சருமம் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

பால்
சந்தனத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது. அதிலும் சருமத்தில் திடீரென்று சிவப்பு நிறத்திலோ அல்லது முகப்பருவினால் எரிச்சல் ஏற்பட்டாலோ, சந்தனப் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளி
சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.
தயிர்
தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.
கற்பூரம்
பொதுவாக சந்தனப் பொடி முகப்பருவை போக்குவதில் மிகவும் சிறந்தது. எனவே முகப்பரு அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடியில் சிறிது கற்பூரத்தை பொடி செய்து போட்டு, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் எளிதில் நீங்கிவிடும்.
சந்தன எண்ணெய்
சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.
முட்டை மற்றும் தேன்
மற்றொரு சந்தன ஃபேஸ் பேக் தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.
மஞ்சள் தூள்
சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.
பாதாம் பவுடர்
அழகுப் பராமரிப்பு பொருட்களில் பாதாம் பவுடரும் முக்கியமான ஒன்று. எனவே இந்த பவுடருடன் சேர்த்தும் மாஸ்க் போடலாம். அதற்கு பாதாம் பவுடர் மற்றும் சந்தனப் பொடியை ஒன்றாக கலந்து, சிறிது பால் உற்றி பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் நன்கு பளிச்சென்று காணப்படும்.
முல்தானி மெட்டி
சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டர்
பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
 
குறிச்சொற்கள் : , , , , , , ,
 
 
 

சத்தியம் சிறப்பு செய்திகள்

 • news 66 26
  இறந்த மாணவியின் மார்க்சீட்டை பயன்படுத்தி டாக்டரான சென்னை பெண்
 • news 55 26
  நெல்லை அருகே இரவில் ஓடும் பேருந்தில் திடீரென அணைந்த விளக்குகள் – அச்சத்தில் உறைந்த  பயணிகள்
 • news 22 26
  தாம்பரம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் பிணம் கண்டெடுப்பு…
 • news 11 26
  வீட்டுக்கு வெளியே தூங்கியவர்களை கடித்து குதறிய மர்ம விலங்கு
 • 26th-10am-5
  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம்
 • 26th-10am-7
  இன்று பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் குறித்த தகவல்கள்
 • 26th-10am-sp-news-6
  மலேசியாவில் படகு கடலில் கவிழ்ந்து விபத்து :  8 பேர் பலி
 • 26th-10am-sp-news-5
  மலையில் இருந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 29 பேர் படுகாயம்
 • 26th-10am-sp-news-4
  மலைவாழ் பெண்களை அடித்து துன்புறுத்திய வனத்துறை அதிகாரி
 • 26th-10am-sp-news-3
  ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்
 • 26th-10am-sp-news-2
  பாபர் மசூதி இடிப்பு சம்பவங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது : மன்மோகன் சிங் 
 • 26th-10am-sp-news-1
  பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
 • Facebook
 • Google Plus
 • Twitter
 • RSS Fees
Sathiyam TV சத்தியம் தொலைக்காட்சி
ஏதேனும் கேள்விகள் இருந்தால்?
கருத்து படிவம் சமர்ப்பிக்க.
மின்னஞ்சல் முகவரி
info@sathiyam.tv
× உங்கள் சத்தியம் தொலைக்காட்சி DTHல் வர வேண்டுமா? ஆம் என்றால், கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் DTH ஆபரேட்டரை தேர்ந்தெடுக்கவும்.