Quantcast
 • துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஓட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்
 • திருவண்ணாமலை : தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை
 • முல்லை பெரியாறு அணை பகுதியில் ஆய்வை மேற்கொண்டுள்ள மூவர் குழு
 • திருப்பூர் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து : 15 பேர் படுகாயம்.
 • சிவகங்கை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : ஒருவர் பலி
healthy and beauty hair

பிரச்சனை இல்லா கூந்தல் வேண்டுமா?

பொதுவாக முல்தானி மெட்டியை சரும பராமரிப்பில் தான் பயன்படுத்துவோம். அதிலும் முகப்பரு பிரச்சனைகள் இருக்கும் போது, சருமத்திற்கு முல்தானி மெட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு பட்டுப் போன்று இருக்கும்.

இத்தகைய முல்தானி மெட்டி சருமத்தை அழகாக்குவதற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக பொடுகு, முடி வெடிப்பு போன்றவற்ற தடுப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. சரி, இப்போது கூந்தல் பிரச்சனைகளுக்கு எந்த மாதிரியான முல்தானி மெட்டி ஹேர் பேக் போடுவது என்று பார்ப்போம்.

முடி வெடிப்புக்கு

இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊற வைக்க வேண்டும். பின் காலையில் எழுந்து சுடுநீரில் நனைத்த துணியால் தலையைச் சுற்றி 10 நிமிடம் ஊற வைத்து, துணியை நீக்கி விட வேண்டும். அடுத்து முல்தானி மெட்டி மற்றும் தயிரை சரிசமமாக எடுத்துக் கொண்டு கலந்து, அதனை கூந்தலில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், நாளடைவில் முடி வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

வறட்சியான முடிக்கு

4 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியில், 1/2 கப் தயிர், பாதி எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

எண்ணெய் பசை முடிக்கு

ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி கலந்து 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பொடி சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் கூந்தலில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். இதானல் கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கிவிடும்.

நேரான முடி ஆக்குவதற்கு

சுருட்டை முடி உள்ளவர்களுக்கு நேரான முடியின் மீது ஆசை அதிகம் இருக்கும். ஆகவே அப்படி இயற்கை முறையில் கூந்தலை நேராக்குவதற்கு, ஒரு கப் முல்தானி மெட்டி பொடி, 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் கூந்தலை சீப்பு கொண்டு ஒருமுறை வாரி, பின் அதில் முல்தானி மெட்டி பேக்கை தடவி நன்கு உலர வைத்து, இறுதியில் நீரில் அலசி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், சுருட்டை முடியானது நீங்கி, நேரான முடியைப் பெறலாம்.

source: boldsky

 
குறிச்சொற்கள் : , , , ,
 
 
 

சத்தியம் சிறப்பு செய்திகள்

 • perumbalur
  பெரம்பலூர் : கோழிப்பண்ணையில் தீ விபத்து.
 • thiruvarur
  திருவாரூர் அருகே தீடீர் தீவிபத்து : 7 வீடுகள் எரிந்து நாசம்
 • cbe
  கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து வந்த வாலிபர்
 • cbe
  மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
 • vellore
  காதலால் கை,கால் இழந்த வாலிபர் : சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு விடக்கோரி வி.சி.கட்சி புகார்
 • thiruvalur
  திருவள்ளூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் கொள்ளை
 • pthu 1
  ஏல சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பெண் மீது பாதிக்கபட்டவர்கள் புகார்.
 • pthukotai
  புதுக்கோட்டையில் 7ம் வகுப்பு படிக்கும் 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 பேர் கைது
 • tpr
  திருப்பூர் : சாலை விபத்தில் போலீசார் ஒருவர் பலி
 • tvm
  தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை
 • vellore
  குடியாத்தம் அருகே மேம்பாலம் உடைந்து லாரி கவிழ்ந்து விபத்து
 • theni
  மாசடைந்த ஊரணியை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
 • Facebook
 • Google Plus
 • Twitter
 • RSS Fees
Sathiyam TV சத்தியம் தொலைக்காட்சி
ஏதேனும் கேள்விகள் இருந்தால்?
கருத்து படிவம் சமர்ப்பிக்க.
மின்னஞ்சல் முகவரி
info@sathiyam.tv
× உங்கள் சத்தியம் தொலைக்காட்சி DTHல் வர வேண்டுமா? ஆம் என்றால், கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் DTH ஆபரேட்டரை தேர்ந்தெடுக்கவும்.