கோத்தபயவுக்கு விடுத்த அழைப்பு..! வெளுத்து வாங்கிய திருமா..!

359

பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்ச-வை இந்தியாவிற்கு அழைத்திருப்பது, தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வரும் 29ம் தேதி இந்தியா வரவுள்ளார்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்த அழைப்பை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், இலங்கை முழுவதும் ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, அங்குள்ள தமிழர்களை அழிக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of