தேமுதிகவின் பதினான்காம் ஆண்டு துவக்க விழா கொடியை ஏற்றி கொண்டாட்டம்

879
vijayakanth

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பதினான்காம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

இல்லம் முன்பு திரண்டிருந்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கொடியை ஏற்றி வைத்த பிறகு இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் டாக்டர்.இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி,கழக அவைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.